தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிட்., 1964 ஆம் ஆண்டு ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாக, கூட்டுறவு சாராத நெசவாளர்களின் தொழிலுக்கு தேவையான நிதி உதவியினை அளிக்கும் நோக்குடன் துவக்கப்பட்டதாகும். கழகத்தின் உறுப்பினர்கள் செயல் முறை மூலதன கடன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
1) தகுதி : கழகத்தின் உறுப்பினர்கள் மட்டுமே கழகத்திட்ம் கடன் பெற தகுதியுடையவர்கள். ஒரு உறுப்பினர் அவர் முதலீடு செய்த பங்கு மூலதனத்தின் பத்து மடங்கு அளவுக்கு கடன் பெறலாம். ஒரு உறுப்பினர் அவரிடம் குறைந்தது பத்து பங்குகள் இருந்தால் கடனைப் பெற முடியும். மேலும், கடன் பெறும் தொகையில் பத்தில் ஒரு மடங்குக்கு சமமான தொகை விளிம்பு தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும்.
2) நோக்கம் : கைத்தறி, விசைத்தறி மற்றும் உள்ளாடை இரகங்களை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல், செயல்முறை படுத்துதல் ஆகிய பணிகளுக்கு கடன் வழங்கப்படும்.
3) கடன் தொகை வரம்பு : ஒரு உறுப்பினர் அதிகபட்சமாக ரூ.1,00,000/ வரை கடன் பெற தகுதி உடையவர் ஆவார். ஏற்கனவே உறுப்பினர் கடன் வாங்கி முறையாக திருப்பி செலுத்தியிருந்தால் அவர் அதிகபட்சமாக ரூ.2,00,000/ வரை கடன் பெற தகுதி உடையவர் ஆவார்.
-4) ஈடு (பாதுகாப்பு) : நிதி உதவி பெற விரும்பும் உறுப்பினர்கள் அசையா சொத்து வடிவத்தில் ஈடு(பாதுகாப்பு) வழங்க வேண்டும். அசையா சொத்து ஊரக பகுதிகளில் அமைந்திருந்தால் அதன் மதிப்பில் 50% மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைந்திருந்தால் 60 % கடனாக வழங்கப்படும். உறுப்பினர்கள் ஈடு(பாதுகாப்பு)சொத்து தொடர்பான அசல் உரிமைப் பத்திரங்களை கழகத்திட்ம் வழங்க வேண்டும்.
5) கடனை திரும்ப செலுத்துதல் : மொத்த கடன் பெற்ற தொகையும் 18 மாதங்களில் இரு தவணைகளாக திரும்ப செலுத்தப் படவேண்டும். வட்டி ஒவ்பொரு காலாண்டிலும் செலுத்தப் படவேண்டும்.
6) வட்டி : கடன் பெற்ற உறுப்பினர்கள் அவ்வப்போது கழகம் நிர்ணயித்த கட்டணத்தில் வட்டி செலுத்த வேண்டும். தற்போது, வட்டி விகிதம் 12%ஆகும். அசலை தாமதமாக செலுத்துவதற்கு அபராத வட்டி விதிக்கப்படும்.
7) கடன் பெறுவதற்கான செயல்முறை: கழகத்திடமிருந்து நிதி உதவி தேவைப்படும் உறுப்பினர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
கழக நிர்வாகம்
கழகத்தின் நிர்வாகம் அதன் இயக்குநர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. கழகத்தின் இயக்குநர்கள் குழுவில் 4 அதிகாரபூர்வ இயக்குநர்களும் 8 அதிகாரபூர்வமற்ற இயக்குநர்களும் உள்ளனர். கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர்/ இயக்குநர் கழகத்தின் தலைவர் ஆவார்.
கழகத்தின் நிதி செயல்பாடு
கழகம் தற்போது வரை குவிந்த நட்டத்தில் இயங்கி வருகிறது. கழகத்தின் கடந்த 10 ஆண்டுகளுக்கான கழகத்தின் நிதி செயல்பாடு கீழ்கண்டவாறு உள்ளது.
வருடம்
|
அனுமதிக்கப்பட்ட
கடன்
|
கடன் வNல்
|
மொத்த நிலுவை
(ரூ)
|
தவணை
கடந்த
நிலுவை
(ரூ)
|
சேர்ந்த வட்டி
(ரூ)
|
இலாபம்/ நட்டம்
நடப்பு ஆண்டில்
(ரூ)
|
குவிந்த நட்டம்
(ரூ)
|
எண்ணிக்-கை
|
மதிப்பு
(ரூ)
|
மதிப்பு
(ரூ)
|
%
|
2010-11
|
229
|
84.20
|
129.36
|
40
|
452.66
|
338.04
|
390.61
|
2.29
|
(-) 213.23
|
2011-12
|
201
|
78.98
|
150.00
|
44
|
405.49
|
300.84
|
384.18
|
13.06
|
(-) 200.17
|
2012-13
|
149
|
62.42
|
107.21
|
53
|
357.63
|
256.50
|
358.94
|
10.60
|
(-) 189.57
|
2013-14
|
149
|
40.94
|
73.75
|
34
|
312.34
|
247.85
|
367.53
|
(-)13.96
|
(-)203.53
|
2014-15
|
99
|
43.28
|
62.46
|
36
|
292.50
|
237.59
|
389.62
|
13.05
|
(-)190.48
|
2015-16
|
49
|
19.76
|
67.12
|
39
|
256.61
|
238.88
|
388.100
|
10.37
|
(-)180.12
|
2016-17
|
21
|
8.63
|
39.75
|
23
|
225.42
|
205.84
|
396.24
|
10.85
|
(-)169.26
|
2017-18
|
-
|
-
|
7.82
|
10
|
217.59
|
217.59
|
419.48
|
17.57
|
(-)151.69
|
2018-19
|
-
|
-
|
7.00
|
9
|
208.22
|
208.22
|
452.69
|
40.03
|
(-)111.66
|
2019-20
|
-
|
-
|
2.09
|
3
|
209.68
|
209.68
|
468.82
|
14.95
|
(-) 96.71
|
மேலும் விபங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
முகவரி
|
குறியீட்டு எண்
|
தொலைபேசி எண்.
|
தொலை நகல் எண்
|
மின்னஞ்சல்
|
மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் லிட்,
குறளகம் 2 வது தளம்,
சென்னை-600108
|
044
|
25 331221
|
-
|
tnhdc.handloom@gmail.com
|