தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை 06.07.1973-ல் பதிவு செய்யப்பட்டு 05.09.1973 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாலை துணி வெளுத்தல், சாயமிடல், மெருகேற்றல், அச்சிடல் போன்ற பல்வேறு பதனிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாலை மாதம் ஒன்றிற்கு 23.00 இலட்சம் மீட்டர் துணிகளை பதனிடும் திறன் பெற்றுள்ளது. தமிழக அரசு வழங்கும் சீருடைத் துணிகளை, இலவச சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் பதனிடும் பணிகளை செய்து வருகிறது. மேலும் கேரள அரசின் சீருடைத் திட்ட துணிகளையும் மற்றும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய பஞ்சாலைக் கழகம், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், கோயமுத்தூர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், கேரளா மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கேரளா கைத்தறி வளர்ச்சிக் கழகம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகிய நிறுவனங்களின் துணிகளை பதனிடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய ஆலையின் பதனிடும் திறன் நாள் ஒன்றுக்கு 90,000 மீட்டர் மற்றும் மாதம் ஒன்றுக்கு 23 இலட்சம் மீட்டர் என்ற அளவில் உள்ளது.
சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
பூஜ்ய கழிவு நீர் என்ற நிலையினை அடைய, ஆலையில் கழிவு நீர் மேலாண்மையுடன் கூடிய எதிர் சவ்வூடு பரவல் முறையினை பயன்படுத்தி தரமான துணிகள் பதனீடு செய்வதுடன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி சூரிய ஆவியாக்கல் முறையினை தவிர்த்து, தற்போது போர்ஸ்டு சர்குலேசன் எவாப்பரேட்டர் (FCE) மற்றும் அஜிடேட்டட் தின் பிலிம் டிரையர் (ATFD) ஆகிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த ஆலையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்குடன், கோன் சாயமிடும் பிரிவு
ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்க, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு அரசால் 2019-ஆம் ஆண்டில் முதற்கட்டமாக ரூ.165 இலட்சம் விடுவிக்கப்பட்டு, கோன் நூல் சாயமிடும் இயந்திரங்கள் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கோன் நூல் சாயமிடும் இயந்திரங்கள் நிறுவும் பணியினை வெற்றிகரமாக முடிக்கும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு அரசால் இத்திட்டத்தின் எஞ்சிய தொகை ரூ.195.00 இலட்சம் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாலை, 2021-22 ஆம் ஆண்டில்
129.43 இலட்சம் மீட்டர் துணிகளை பதனிட்டு ரூ.24.79 கோடி அளவிற்கு வணிகம் மேற்கொண்டு ரூ.4.15 கோடி உத்தேச நிகர இலாபம் ஈட்டியுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம்
இவ்வாலையானது 2022-23 ஆம் ஆண்டில் தமிழக அரசின் இலவச சீருடை திட்டத்தின்கீழ் 153 இலட்சம் மீட்டர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் துணிகள் 3.00 இலட்சம் மீட்டர்கள் என மொத்தம் 156 இலட்சம் மீட்டர் துணிகளை பதனிட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆலை உத்தேசமாக ரூ.4.40 கோடி நிகர இலாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.
ஸ்டென்டர் இயந்திரம்
மெர்சரைஸிங் இயந்திரம் (துணி மெருகேற்றுதல்)
ஜிகர் இயந்திரம் (பருத்தி துணி சாயமிடுதல்)
தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் உள்ள
.T.F.D இயந்திரம்