வரலாற்றுப் பின்னணி மற்றும் குறிக்கோள்
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் 24.04.1969 அன்று அரசு நிறுவனமாக 1956 ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பஞ்சாலைகளை நிறுவி நடத்துதல். பஞ்சாலை தொடர்புடைய அனைத்துத் துணை வணிகங்களையும் மேற்கொள்ளுதல்.
மாநில அரசின் பங்கேற்றல்.
வ.எண்
|
விவரங்கள்
|
மதிப்பு (ரூபாய் இலட்சங்களில்)
|
1
|
அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம்
|
500.00
|
2
|
செலுத்தப்பட்ட பங்கு மூலதனம்
|
154.00
|
3
|
அரசுக்கடன்
|
478.66
|
4
|
அரசு மானியம்
|
139.00
|
|
மொத்தம்
|
1271.66
|
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் ஆனது சொந்தமாக 3 விசைத்தறி கூடங்களையும் ஒரு ஏர்ஜெட் தறி கூடத்தையும் நடத்தி வருகிறது.
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் ஆனது இலவச சீருடைத் திட்டத்தின் கீழ் தேவையான சீருடைத் துணிகள் மற்றும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து உற்பத்தி திட்டம் பெற்று தனது சொந்த தறிக்கூடங்களின் மூலமாக வேட்டிகளை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. மேலும் அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தேவையான சீருடைத்துணிகள், போர்வை, துண்டுகள் மற்றும் இதர ரக துணிகளை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது.
தற்பொழுது தமிழ்நாடு பஞ்சாலைக் கழகமானது தமிழக அரசின் முகமை நிறுவனமாக செயல்பட்டு இலவச சீருடை மற்றும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடைத்துணி மற்றும் வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து சம்பந்தப்பட்ட விநியோக துறைக்கு அனுப்பி வருகிறது.
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகமானது 119 தொழிலாளர்கள் மற்றும் 13 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் அவர்கள் இக்கழகத்தின் இயக்குநர் குழுவின் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.
அலுவலகத்தின் முகவரி
வ. எண்
|
அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
|
தொலைபேசி எண்
|
மின் அஞ்சல் முகவரி
|
1
|
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம்,
201-பி அழகேசன் சாலை,
சாய்பாபா காலணி,
கோயமுத்தூர்-641011.
|
0422-2450385,
2450386
|
tntc18@gmail.com
|
இந்நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டுகளின் நிதி செயல்பாடுகள் பின்வருமாறு
வ.எண்
|
ஆண்டு
|
நிகர இலாபம்
(ரூபாய் இலட்சத்தில்)
|
1.
|
2018-2019
|
(+)06,44
|
2.
|
2019-2020
|
(+)72.88
|
3.
|
2020-2021
|
(+)78.12
(தோராயமாக)
|