கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை முதன்மை நோக்கமாக கொண்டு, 1956-ஆம் ஆண்டில் கூட்டுறவு துறையிலிருந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை தனியாக பிரிக்கப்பட்டது.
தற்போது, துணிநூல் பிரிவில் தனி கவனம் செலுத்த ஏதுவாக, 2021 ஆம் ஆண்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இரண்டாக பிரிக்கப்பட்டு துணிநூல் துறை என்ற தனி துறை உருவாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 23.10.2021 அன்று இப்புதிய துறை தொடங்கி வைக்கப்பட்டு, துணிநூல் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் தனித்துறையாக செயல்பட்டு வருகிறது.
கைத்தறி மற்றும் விசைத்தறி பிரிவுகளின் ஒருமித்த வளர்ச்சி மற்றும் இத்தொழிலை சார்ந்துள்ள நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் நல்வாழ்வினையும் மேம்படுத்தும் முதன்மை நோக்கத்தினை கைத்தறி ஆணையர் கவனித்து வருகிறார்.